×

ஒமேகா ஈவண்ட் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோபியில் நாளை துவக்கம்

 

ஈரோடு: ஒமேகா ஈவென்ட் நிறுவனம் கடந்த 17 ஆண்டுக்கு மேல் பொழுதுபோக்கு கண்காட்சிகள், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சிகள், கல்வி கண்காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். நாளை கோபியில் சீதா லட்சுமி கல்யாண மண்டபத்தில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை கல்வியாளர் பேராசிரியர். ஜெயபிரகாஷ் காந்தி துவக்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி ஆலோசனைகளை வழங்குகிறார். கண்காட்சியில் பிளஸ்-2 படித்த பிறகு உயர்கல்வி படிப்பது தொடர்பான கல்வி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. காட்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

ஒமேகா ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேஷ், தமிழ், அருண், பிரனேஷ் ஆகியோர் கூறியதாவது: கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகளை பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு உயர்கல்விக்கு என்ன படிக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் உதவியாக இருக்கும். இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் படிப்புகளை பற்றி ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம். முதலில் வரும் 500 மாணவர்களுக்கு அழகிய பேக் இலவசமாக வழங்கப்படுகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஒமேகா ஈவண்ட் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோபியில் நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Omega Event ,Gobi ,Erode ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு