×

எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 535 பயனாளிகளுக்கு ₹3.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர், ஏப். 28: திருவள்ளுர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 535 பயனாளிகளுக்கு ₹3.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது : தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைகளின்படி, மக்களை சென்று சந்தியுங்கள் அவர்களின் குறைகளை கேட்டறியுங்கள், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள் என அரசு வழிகாட்டுதலின்படி நடக்கக்கூடிய ஒரு சிறப்பு முகாமாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளது. இன்றைக்கு இந்த முகாமில் பல்வேறு துறைகள் சார்பாக 535 பயனாளிகளுக்கு ₹3,97,68,470 மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த பல்வேறு நலத்திட்டங்களை, நிதியுதவிகளை இந்த கிராமத்தைச் சார்ந்த, இந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கப்பெறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். ஏற்கனவே இந்த சுற்றுவட்டாரப்பகுதியில் அளித்த மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அப்படியிருந்தும், பொதுமக்களின் தேவைகள் நிறைய உள்ளது. எனவே, பொதுமக்கள் இத்திட்டங்களை அறிந்துகொள்வதற்கும், மனுக்களை வழங்குவதற்கும் இந்த முகாம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

கடந்த ஆண்டு மாநிலத்திலேயே பிறப்பின பாலின சதவிகிதத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சிறந்த முதல் மாவட்டமாக நம் திருவள்ளுர் மாவட்டத்திற்கு விருது கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதே போன்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதில் தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாகவும் நம் திருவள்ளுர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இவை இரண்டுக்குமே தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து ஒரு தங்க பதக்கம் வாங்குவதற்கான வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எனக்கு கிடைத்தது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் தான் இந்த இரண்டு விஷயங்களும் ஒரு சவாலாக உள்ளது.

பாலின சதவிகிதத்தை பொறுத்தவரை குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அந்த குழந்தை எந்தவித பாதிப்புமின்றி இருப்பதற்கும், குழந்தை இறப்பு வரக்கூடாது என்பதற்கும், பாலினத்தை பார்த்து கருகலைப்பு செய்யக்கூடாது என்பதற்கும் தான் இதனுடைய நோக்கமாகும். இந்த செயல்பாடு அனைத்து இடங்களிலும் இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் எப்பவும் இருந்து வருகிறது. அதே போன்று குழந்தை திருமணங்கள் என்பது இந்த சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு குழந்தைக்கு திருமண வயது என்பது 18 என அரசு விதித்த சட்டமாகும். அந்த வயதிற்கு முன் அந்த குழந்தைக்கு திருமணம் செய்வதால் உடல் மற்றும் மன முதிர்ச்சி இருக்காது.

அதன் பிறகு வரும் குழந்தை பிறப்பு, பிரசவம் போன்ற முக்கிய நிகழ்வுகளை எதிர்கொள்ள போதிய சுகாதாரம் இருக்காது. அதனால் தாய் இறப்பு, பிரசவ வலி, குழந்தை இறப்பு என ஏற்படும். அந்த மாதிரி பெண்களுக்கு திருமணம் செய்யும்போது குழந்தை இறப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால், 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்ய கூடாது என அமலாக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் சரியாக படித்து, நம் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து, எதிர்கால பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு 18 வயதிற்கு பின்பே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

பெண் கல்வியால் தான் சமுதாயத்தை உயர்த்த முடியும் என்று அரசு முடிவெடுத்ததன் அடிப்படையில் தான் இந்த புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த ஒரு சமுதாயத்தையும், பல்வேறு பிரச்சனைகள் உள்ள சமுதாயத்தையும் ஒப்பிடும்போது முக்கியமாக விளங்குவது பெண்ணாகும். ஆதலால் பெண் குழந்தைகளை படிக்க வைப்பது என்பது அவசியமான ஒன்றாகும். எனவே, உங்கள் பகுதியில் ஒரு குழந்தை திருமணம் நடப்பது என்பது உங்கள் கவனத்திற்கு தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட அளவிலான சைல்டு லைன் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, உங்கள் பகுதி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள எந்தப் பகுதிகளிலும் இதுபோன்று குழந்தை திருமணம் நடைபெறுவதை கண்டறிந்தால் அரசின் கவனத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுத்த நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த வருடம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏதாவது ஒரு இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அரசின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆதலால் நிறைய விஷயங்கள் நன்றாக செய்ய முடிந்தது. அதே போன்று இந்த வருடமும் உறுதுணையாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொ) மை.ஜெயராஜ பௌலின், சுகாதார துறை துணை இயக்குனர் ஜவஹர்லால், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, வட்டாட்சியர் கே.பி.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி சந்தோஷ், துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். பெண் கல்வியால் தான் சமுதாயத்தை உயர்த்த முடியும் என்று அரசு முடிவெடுத்ததன் அடிப்படையில் தான் இந்த புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த ஒரு சமுதாயத்தையும், பல்வேறு பிரச்சனைகள் உள்ள சமுதாயத்தையும் ஒப்பிடும்போது முக்கியமாக விளங்குவது பெண்ணாகும். ஆதலால் பெண் குழந்தைகளை படிக்க வைப்பது என்பது அவசியமான ஒன்றாகும். எனவே, உங்கள் பகுதியில் ஒரு குழந்தை திருமணம் நடப்பது என்பது உங்கள் கவனத்திற்கு தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட அளவிலான சைல்டு லைன் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

The post எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 535 பயனாளிகளுக்கு ₹3.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Public Relations Project Camp ,SVGpuram Panchayat ,Thiruvallur ,Mass Communication Program Camp ,SVG Puram Panchayat ,RK Pettai Circle, Thiruvallur District ,Public Relations Program Camp ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி