×

பாக்.கில் இருந்து ஊடுருவ முயன்ற ட்ரோன்: இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற ட்ரோனை அமிர்தசரஸ் அருகே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் ட்ரோன் மூலம் ஆயுதம், வெடிபொருள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை அச்சுறுத்தலாக உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ தொலைவுக்கான இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இப்பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையால் இந்தியா பல ஆண்டுகளாகவே நேரடியாக பாதிப்புக்கு ஆளான நிலையில், போதைப்பொருள், ஆயுத கடத்தல் போன்ற மறைமுக சாவல்களையும் எல்லையில் வீரர்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற காலம் என்பதால், ட்ரோன்கள் மூலம் இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுகின்றன. முதன் முதலாக 2019ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அமிர்தசரஸ், தான் தரன், பெரோஸ்பூர், குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ட்ரோன்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமிர்தசரஸ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புல்மோரானில் உள்ள தனோவா கலன் கிராமத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் பறந்து வந்ததை பார்த்தனர். இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற அந்த ட்ரோனை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் ட்ரோன் நொறுங்கியது. இதில், 2 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post பாக்.கில் இருந்து ஊடுருவ முயன்ற ட்ரோன்: இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது appeared first on Dinakaran.

Tags : Gill ,Indian Army ,Amritsaras ,military ,Pakistan ,India- ,Dinakaran ,
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...