×

வெம்பக்கோட்டை அருகே 16.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

விருதுநகர், ஏப்.27: வெம்பக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ஆலங்குளம், சுண்டகுளம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியே வந்த இரு சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதில், 1650 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனங்களில் வந்த திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியைச்சேர்ந்த பேச்சிமுத்து(35), கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த கிறிஸ்டியன்பாலா(22), பாஸ்டின்(34) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், கோவில்பட்டியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(35), விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பசும்பொன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post வெம்பக்கோட்டை அருகே 16.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vembakkottai ,Virudhunagar ,Civil Supplies Crime Investigation Division ,Vembakottai ,Dinakaran ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...