×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வடபழனி முருகன், பார்த்தசாரதி கோயில் நிலத்தை அளக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 27: சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளதாகவும், அதன்படி பதிவு மறுக்கப்பட்ட கோயில் சொத்துகளின் பட்டியலை தாக்கல் செய்யவும், மூன்று கோயில்களுக்கும் சொந்தமான நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வு, வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு, அளந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை, கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வடபழனி முருகன், பார்த்தசாரதி கோயில் நிலத்தை அளக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Varadaraja Perumal Vadapalani Murugan ,Parthasarathy ,Temple ,Chennai ,Chennai Vadapalani ,Murugan Temple ,Tiruvallikeni ,Parthasarathy Temple ,Kanchipuram Varadaraja Perumal Temple ,
× RELATED எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன்...