×

சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர் தங்கராஜூ சுப்பையா போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்திய வழக்கிலும் தங்கராஜு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குகளில் கடந்த 2018ம் ஆண்டு தங்கராஜு சுப்பயைாவுக்கு தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு எதிர்ப்பையும் மீறி சிங்கப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் நேற்று தங்கராஜு சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Singapore ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி