×

இன்று உலக அறிவுசார் சொத்து தினம் 2023ல் ‘பெண்களின் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டம்

திருச்சி : உலகில் கண்டறியப்படும் ஒரு மனிதனின் கண்டுபிடிப்பை வேறு ஒரு நபர் திருடுவதை தடுப்பதற்காகவே இந்த அறிவுசார் சொத்துரிமை சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தந்த நாடுகளில் உள்ள வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

இதில் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பாதுகாக்க வணிக சின்னம் (ட்ரேட் மார்க்) பெறுவதும், கலை சார்ந்த இசை, நடனம், பாடல்கள் அனைத்திற்கும் காப்புரிமை (பேடெண்ட்) பெறுவதும் மற்றும் ஒரு சிறப்பை அடிப்படையாக கொண்டு அந்த ஊர் அடையாளப்படுத்தப்படும் போது அதற்கு புவிசார் குறியீடு பெறுவதும் கட்டாயமானதாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் புவிசார் குறியீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன. உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.

நடப்பு 2023ல் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி என 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின்கீழ் கொண்டாடப்படும் இந்த அறிவுசார் சொத்துரிமை தினமானது இந்தாண்டு அறிவுசார் சொத்துரிமையில் பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பின்கீழ் கொண்டாடப்படுகிறது.

இதுக்குறித்த சென்னையை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத்தின் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்ததாவது: உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின்கீழ் கொண்டாடப்படும். அதேபோல், 2023ம் ஆண்டில் ‘பெண்களின் முன்னேற்றம்’ என்ற தலைப்பின்கீழ் கொண்டாடப்படுகிறது. அதன்மூலம் ‘பெண்கள் புதுமை மற்றும் படைப்பாற்றலை துரிதப்படுத்துதல் என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது.

இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள பெண் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தொழில்முனைவோரின் \\”உங்களால் செய்ய முடியும்\\” என்ற மனப்பான்மை மற்றும் அவர்களின் அற்புதமான வேலைகளைக் கொண்டாடுவது தான் நோக்கமாக உள்ளது. எனவே இந்த நாளில் நாங்கள் இளைஞர்களிடமும், பெண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது தான் நோக்கமாக உள்ளது.

இந்தியாவிலேயே அதிகமான புவிசார் குறியீடு உள்ள ஒரு மாநிலம் தமிழ்நாடு தான், மொத்தம் 56 புவிசார் குறியீடுகள் உள்ளது.
மேலும் இந்தாண்டு பெண்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், விவசாயம் சார்ந்த வேளாண் பொருட்கள், கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

The post இன்று உலக அறிவுசார் சொத்து தினம் 2023ல் ‘பெண்களின் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Intellectual Property Day 2023 ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...