- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி
- ரக்கைன்
- புது தில்லி
- இந்தியன்
- ஆஸ்திரேலியா
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
- ஐபிஎல்
- தின மலர்
புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பி ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஜிங்க்யா ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஷ்ரேயாஸ், பன்ட் காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில் ரகானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று கேகேஆர் அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அவர் 29 பந்தில் 71 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜிங்க்யா ரகானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்திய அணியில் ரகானே appeared first on Dinakaran.