×

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்:அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர். அங்கன்வாடிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் லட்சுமி கலந்துககொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், காஸ் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளபடி காலதாமதமின்றி வழங்கவேண்டும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஏற்கெனவே காலை சிற்றுண்டி கொடுக்கும் நிலையில், தனியாருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செல்போன் வழங்கி 4 ஆண்டுகள் ஆன நிலையில் பழுதடைந்துள்ளதால் உடனே புதிய செல்போன் வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளூர் பணியிட மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும்.

மினி மையப் பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த்தப்பட்டது,
இணச்செயலாளர் எஸ்.ஞானகுமார், எம்.ஜோதி, ஏழுமலை, சதீஷ்குமார், தியாகு, டில்லி பாபு, தமிழ்ச்செல்வி, நகராட்சி கவுன்சிலர் சித்ரா விஸ்வநாதன், மஞ்சுளா ஏழுமலை, பிரியங்கா சேகர், கோட்டீஸ்வரி நாகராஜ், நாகம்மாள் சேகர் உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி கிளை செயலாளர் எம்.திலகவதி முனிரத்தினம் நன்றி கூறினார்.

The post அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Anganwadis ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்