×

வலங்கைமான் பகுதியில் முக்கிய பாசன வடிகாலான சுள்ளான்ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காயதாமரைகளை அகற்ற வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் வெட்டாறுக்கும் குடமுருட்டி ஆற்றிற்கும் இடையில் ஓடுகின்ற முக்கிய பாசன வடிகால் ஆன சுள்ளன் ஆற்றை ஆக்கிரமித்துள்ள நாணல் மற்றும் வெங்காய தாமரைகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,வலங்கைமான் பகுதியில் வெட்டாறுக்கும் குடமுருட்டி ஆற்றிற்கும் இடையில் ஓடுகின்ற முக்கிய பாசன வடிகால் ஆன சுள்ளன் ஆற்றின் நீளம் சுமார் 18 கிலோ மீட்டர் ஆகும்.

சுள்ளன் ஆறானது பொய்கை ஆறு என்ற பெயரோடு பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி அருகே புரசக்குடி என்ற பகுதியில் சிறு வடிவாய்காலாக தோன்றி வலங்கைமான் பகுதியில் சுமார் 45 மீட்டர் அகலத்தில் வெட்டாற்றில் முடிகிறது. இந்த சுள்ளன் ஆற்றிற்கு மேட்டூர் அணையிலிருந்து பிரியும் காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இதுவரை இணைப்பு எதுவும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் காவேரி கோட்டத்தின் கீழ் உள்ள குடமுருட்டி ஆறு, வெண்ணாறு கோட்டத்தின் கீழ் உள்ள வெட்டாறு ஆகியவற்றில் அதிகமாக நீர் வருகின்ற போது பாசனத்திற்கு போக மீதமுள்ள உபரி நீர் சுள்ளான் ஆற்றை நிரப்பும். அல்லது மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமான உபரி நீர் விவசாயிகளால் வடிய விடுகின்ற போது சுள்ளன் ஆறு நிரம்பும்.

டெல்டா மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் பாசணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட உடன் சாகுபடி மேற்கொள்ளபடும் நிலையில் இப்பகுதி ஒரு போக சாகுபடி செய்வதற்கு உபரி நீருக்காகவும், மழை நீருக்காகவும் தஞ்சாவூர் திருவாரூர் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாபநாசம், வலங்கைமான், குடவாசல் என மூன்று ஒன்றியங்களை சேர்ந்த 1000 கணக்கான சுள்ளன் ஆற்று விவசாயிகள். 5000 கணக்கான விவசாய கூலி தொழிலாளிகள் என தலைமுறை தலைமுறையாக காத்திருப்பர். விவசாயிகளின் தேவை அறிந்து பாசன ஆறுகளோடு மாற்றி சுள்ளன் ஆற்றை அமைக்காததால் அந்நியர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட விதத்தில் சுள்ளன் ஆறு இன்று வரை திகழ்கிறது.

சுள்ளன் ஆறு பாபநாசம் ஒன்றியத்தில் புரசக்குடி, நாவலடி, ஓலப்பச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ரெகுலேட்டர்களும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவிச்சாக்குடி, ஆவூர், குளக்குடி, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட ரெகுலேட்டர்கள் என 7 ரெகுலேட்டர்கள் பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகரமாங்குடி, அவிச்சாகுடி, ஆவூர்&சாளுவம்பேட்டை, கோவிந்தகுடி, வீராணம், மேல நல்லம்பூர், கீழ நல்லம்பூர், குளக்குடி, தொழுவூர், காங்கேயநகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது.

நல்லூர் இனாம் கிளியூர் கோவிந்தகுடி சந்திரசேகரபுரம் ஆதிச்சமங்கலம் விருப்பாட்சிபுரம் வலங்கைமான் போன்ற கிராமங்களுக்கு முக்கிய வடிகாலாக சுள்ளன் ஆறு விளங்குகிறது. ஆவூர் ரெகுலேட்டார்கள் மூலம் வீராணம், பூண்டி, ஆவுடையாநத்தம், வடுவக்குடி, மேலநல்லம்பூர், ராஜாகருப்பூர், கோவிந்தகுடி, ஆவூர்&சாளுவம்பேட்டை பகுதி உள்ளபட சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது.

நதிநீர் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகிய நிலையில் முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள சுள்ளன் ஆற்றை பாசன ஆறுகளுடன் இணைக்க வேண்டும் மேலும் சுள்ளன் ஆற்றை முறையாக நிதி ஒதுக்கி தூர்வாரவேண்டும் சுள்ளன் ஆற்றில் அனைத்து ஆறுகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது நல்லூர் பகுதியில் குடமுருட்டி ஆற்றிலிந்து பிரிந்து வரும் ஆவூர் வாய்க்காலில் காருகுடி பிரிவு வாய்க்கால் அருகே ரெகுலேட்டர் அமைத்து அந்த வாய்க்கால் மூலம் சுள்ளன் ஆற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதத்தில் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டு வரும் சுள்ளன் ஆற்றுப் பகுதியை சேர்ந்த 5000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வரலாற்று பிரச்சினையை தீர்த்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை காத்திட அரசு முன்வரவேண்டுமென அனைத்து தரப்பு விவாசயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலங்கைமான் பகுதியில் முக்கிய பாசன வடிகாலான சுள்ளான்ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காயதாமரைகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chullan River ,Walangaiman ,Valangaiman ,Vettar ,Kudamuruti river ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள்