×

தங்கம் சவரன் மீண்டும் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்து, சவரன் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,665க்கும், சவரன் ரூ.45,320க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி அட்சயதிரிதியை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,605க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840க்கும் விற்கப்பட்டது. அட்சயதிரிதியை அன்று விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் (23ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,920க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

The post தங்கம் சவரன் மீண்டும் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,SHAVAN ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்