×

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 290 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பிறகு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 80 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 30 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 50 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 84 மனுக்களும் என மொத்தம் 290 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.6.25 இலட்சம் வங்கி கடன் பெற்ற ஒரு பயனாளிக்கு அரசின் மானியத் தொகை ரூ2.25 இலட்சம் உட்பட ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டிலான சரக்கு வாகனமும் ரூ.1.50 இலட்சம் வங்கி கடன் பெற்ற ஒரு பயனாளிக்கு அரசின் மானியத் தொகை ரூ.70 ஆயிரம் உட்பட ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு பயணியர் ஆட்டோவும் என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.10.70 இலட்சம் மதிப்பீட்டிலான வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆவின் விற்பனை மையம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தின கீழ் ஆவின் முகவராக தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான அனுமதி ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் மதுசூதனன், உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி, தாட்கோ மாவட்ட மேலாளர் க.இந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Disability Day Meeting ,Thiruvallur ,Thiruvallur District Collector's Office ,District ,Alfie ,People's Crime Day ,of ,Assistance ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி