×

5 சதவீத வட்டி, இருமடங்காக பணம் தருவதாக கூறி ரூ.7.60 லட்சம் ஏமாற்றிய பைனான்ஸ் உரிமையளாளர் கைது

பெரம்பலூர்:5சதவீத வட்டியும், இரு மடங்காக பணமும் தருவதாகக்கூறி ரூ7.60 லட்சத்தை ஏமாற்றிய பைனான்ஸ் கம்பெனி உரி மையாளரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் கைது செய்தனர். மற் றொருவருக்கு வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசம் தாலுக்கா, அய்யம் பேட்டை கிராமம், பட்டுசாலி யர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சாமிநா தன் (67). இவரிடம் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, திருப்புறம்பியம் கிராமம், சிவன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜ சேகரன் மகன் சுதாகர்(32), மற்றும் பெரம்பலூர் மாவட் டம், குன்னம் தாலுக்கா, கல் லை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பா மகன் சந்தோஷ் குமார்(36) ஆகிய இருவரும் சேர்ந்து, தாங்கள், பைனான்ஸ் கம்பெனி நட த்தி வருவதாகவும் இந்த நிறுவனத்தில் முதலீடு செ ய்தால் 5சதவீத வட்டித் தொ கையுடன், கூடுதலாக இரட் டிப்புத் தொகையாக பணம் தருவதாகவும் ஆசை வார்த் தை கூறியதன் பேரில், சா மிநாதன் கடந்த 2020 மேமா தம் 1ம் தேதி முதல் பல தவணைகளில் நெட் பேங்க் மூலம் (Google Pay) ரூ7.60 லட்சத்தை சாமிநாதன் மக ன் ஜெயசூர்யா (Google Pay) மூலம் அனுப்பியுள்ளார்.

இதில் சாமிநாதன் மூதலீடு செய்த பணத்திற்கு வட்டிப் பணமும், கூடுதல் இரட்டிப் புப் பணமும்கொடுக்காமல் சுதாகர், சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர். பலமுறை தனது பணத்தை கேட்டும் தராததால், தன்னை ஏமாற் றுவதை தெரிந்து கொண்ட சாமிநாதன் பெரம்பலூர் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் நேற்று (22ம்தேதி) ஆம் தேதி வழக்கு பதிவு செய் யப்பட்டு, பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்க வேல் தலைமையில் பெரம் பலூர் மாவட்ட குற்றப்பி ரிவு இன்ஸ்பெக்டர் மீரா பாய் மற்றும் அவரது குழு வினர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த சுதாகரைக் கைதுசெய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தி சிறையில் அடைத்தனர்.

மேலும் வழக்கில் சம்மந்த ப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம், குன்னம் தாலுக்கா, கல் லை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தற்கான நடவ டிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் சிறப்பாக செய ல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்து சிறையில டைத்த மாவட்ட குற்றப்பிரி வு டிஎஸ்பி தங்கவேல், இன் ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் அவரது குழுவினரை பெரம் பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யா ம்ளா தேவி பாராட்டினார்.

 

The post 5 சதவீத வட்டி, இருமடங்காக பணம் தருவதாக கூறி ரூ.7.60 லட்சம் ஏமாற்றிய பைனான்ஸ் உரிமையளாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Uri Center ,Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி