×

பண மோசடி; ஆடிட்டர் கைது

 

திருமங்கலம், ஏப். 23: திருமங்கலம் முத்தையாக நகரை சேர்ந்த ஜெகன் மகள் கேத்தரின்(39). மதுரையில் உள்ள ரப்பர் நிறுவனத்திற்கு புஷ் தயார் செய்து கொடுக்கும் கம்பெனியை கப்பலூர் தொழிற்பேட்டையில் நடத்தி வருகிறார். இவரது கம்பெனி ஆடிட்டரான திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆர்விபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(25) 2021 முதல் 2023 வரை ஜிஎஸ்டி வரி கட்டுவதாக ரூ.3.5 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேத்தரின் புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

The post பண மோசடி; ஆடிட்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Jagan ,Catherine ,Thirumangalam Muthayaga ,Madurai ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் படுதோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்