×

காஷ்மீரில் ரம்ஜான் ஜமியா மசூதியில் தொழுகைக்கு தடை

நகர்: உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இந்தியாவின் பல பகுதிகளிலும், காஷ்மீரிலும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில் ஹஸ்ரத்புல், உள்ளிட்ட புகழ்பெற்ற மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகையில் பங்கேற்றனர். ஆனால், நவ்ஹட்டா பகுதியில் அமைந்துள்ள 14ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற ஜமியா மசூதியில் தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். காலை 9 மணிக்கு பதிலாக காலை 7.30 மணிக்கு தொழுகை நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து காத்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஹஸ்ரத்புல் மசூதியில் தொழுகைக்கு பின் பேட்டி அளித்த மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, ‘‘ஜமியா மசூதியில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவதாக அரசு கூறுகிறது. பிறகு ஏன் தொழுகைக்கு அனுமதி மறுக்கிறார்கள்’’ என கேள்வி எழுப்பினார்.

The post காஷ்மீரில் ரம்ஜான் ஜமியா மசூதியில் தொழுகைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Nagar ,Muslims ,India ,Kashmir ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.