×

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்திய கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம்: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு 150 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கடத்திய கணவன், மனைவி உள்பட 4 பேரை காசர்கோடு மாவட்ட போலீசார் கைது செய்தனர். கேரளாவில் சமீப காலமாக எம்டிஎம்ஏ, கஞ்சா உள்பட போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும், பெங்களூரு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காக போலீசார், போதைப் பொருள் தடுப்பு துறையினர், கலால் துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு கேரளா-கர்நாடக எல்லையான காசர்கோடு மாவட்டம் பேக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை பேக்கல் போலீசார் நிறுத்தி பரிசோதித்தனர். சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 150 கிராம் எம்டிஎம்ஏ கைப்பற்றப்பட்டது. காரில் இருந்த பெங்களூருவை சேர்ந்த முகம்மது வாசிம், சூரஜ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் காசர்கோடு புத்தரியடுக்கம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர், அவரது மனைவி அமீனா அஸ்ராவுக்காக போதைப்பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தது.

அபூபக்கரும், அமீனா அஸ்ராவும் கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் இருந்து எம்டிஎம்ஏ போதை பொருளை வாங்கி காசர்கோட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு 4 பேரையும் போலீசார் காசர்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்திய கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Kerala ,Thiruvananthapuram ,Kasaragod ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...