×
Saravana Stores

நாட்றம்பள்ளி அருகே கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற கொடூர மகன்: காதல் தோல்வியால் வெறிச்செயல்

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (55) விவசாயி. இவரது மனைவி வளர்மதி (50). இவர்களுக்கு கிரி (32), முத்து (28) என்ற மகன்களும், சந்தியா (20) என்ற ஒரு மகளும் உள்ளனர். 2வது மகன் முத்து, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் தோல்வியால் வீட்டை விட்டு வெளியே வராமல் சற்று மனநலம் குன்றிய நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென முத்து கோபத்துடன், தந்தை மோகனின் கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தாராம். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து தாயார் வளர்மதி, தங்கை சந்தியா தடுத்தனர். அவர்களையும் கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளார். இதில் இருவரும் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முத்துவை கை, கால்களை கட்டி வைத்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து முத்துவை கைது செய்தனர். பின்னர் நேற்றிரவு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post நாட்றம்பள்ளி அருகே கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற கொடூர மகன்: காதல் தோல்வியால் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Nattrampalli ,Mohan ,Bachur ,Tirupathur district ,Varamathi ,
× RELATED நாட்றம்பள்ளி அருகே 3 யூனிட் செயற்கை மணல் பறிமுதல்