×

இன்று ரம்ஜான் பண்டிகை: பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

 

பெரம்பலூர்,ஏப்.22: இன்று (22ம்தேதி) புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மா வட்டத்தில் 56பள்ளி வாசல் களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடக்கிறது. இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான புனித ரம்ஜான் பண்டிகை இன்று (22ம்தேதி) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் புனித ரம் ஜான் பண்டிகைக்காக அனைத்து பள்ளிவாசல்க ளும் சிறப்பு தொழுகைக்கு தயார் நிலையில் உள்ளன.குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தில், வி.ஆர்.எஸ். ஏஸ்.புரம் செல்லும் வழி யில் உள்ள, இந்திய தொல் லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 1723ல் கட்டப் பட்டு நடப்பாண்டு 300ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பழமை யான சமாஸ்கான் பள்ளி வாசலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும்.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டியே நடத்தப்படும் இந்த சமாஸ்கான்பள்ளிவாசலில் இன்று காலை 8.30மணிக் கு சிறப்புத்தொழுகை நடத் தப்படுகிறது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய பள்ளிவாசலான வி.களத் தூர் ஜாமிஆ பள்ளி வாசல், லப்பைக்குடிகாடு பேரூரா ட்சியிலுள்ள கிழக்கு மஹ ல்லம், மேற்கு மஹல்லம் பள்ளி வாசல்கள், அரும்பா வூரில் உள்ள ஜும்மா பள்ளி வாசல், வாலிகண்டபுரத் தில் உள்ள ஆசார் மக்பூரா பள்ளிவாசல், விசுவக்குடி அத்தக்வா பள்ளிவாசல், மாவட்டத் தலைநகர் பெரம் பலூரில் உள்ள டவுன் பள் ளி வாசல், மதரஸா பள்ளி வாசல், நூர் பள்ளி வாசல், மக்கா பள்ளிவாசல்,மதீனா பள்ளி வாசல், துறை மங்க லம் பள்ளிவாசல், ஆலம் பாடி சாலை பள்ளிவாசல் மற்றும் தொண்டமாந்து றை, பெரிய வடகரை, குரு ம்பலூர், தேவையூர், தைக் கால், டி.களத்தூர் கை.கள த்தூர், சத்திரமனை, பூலாம் பாடி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட 56 பள்ளிவாசல்களிலும் ரம் ஜான் பண்டிகையையொட் டி சிறப்புதொழுகை நடத்த ப்படுகிறது.

The post இன்று ரம்ஜான் பண்டிகை: பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Perambalur district ,Perambalur ,Ramzan festival ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி