×

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை வழங்க தாசில்தாருடன் பேச்சுவார்த்தை

பொன்னேரி: வல்லூர் ஊராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில், இளைஞர்களுக்கு வேலை வழங்க தாசில்தார் தலைமையில் வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சியில் அடங்கிய குருவிமேடு பகுதி உள்ளது. இங்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் வல்லூர், பட்டமந்திரி கிராம பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கேட்டு கடந்த 5ம் தேதி கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக நேற்று பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், இந்தியன் ஆயில் நிர்வாகிகள் வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார், துணைத் தலைவர் இலக்கியாராயல், கோகுல் கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் சற்குணம், ராஜ்குமார், அந்தோணி, கோகுல், ராஜசேகர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் வரவழைத்து அவர்களிடம் எந்தெந்த பணிகள் காலியாக உள்ளது என முடிவு செய்யப்படும், அவர்களின் அறிவுருத்தலின்படி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வேலை வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வருகிற 26ம் தேதி பேச்சுவார்த்தை கூட்டம் என நடத்தப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.

The post இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை வழங்க தாசில்தாருடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Indian Oil Company ,Ponneri ,Vallur panchayat ,Dinakaran ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...