×

நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு; மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு சீல்

விக்கிரவாண்டி: மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஆலைக்கு தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே காணை அடுத்துள்ள வேடம்பட்டு கிராமத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆலையிலிருந்து நச்சுக்காற்று வெளியேறியது.

இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விழுப்புரம் தாசில்தார் வசந்தகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இன்ஜினியர் இளையராஜா ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஆலையை திறக்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு; மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Tahsildar ,Villupuram district ,Vedampatu ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...