- சென்னை
- சேப்பாக்கம்
- ஐதராபாத்
- சென்னை
- 16வது
- ஐபிஎல்
- மா சிதம்பரம் அரங்கம்
- சென்னை, செப்பாக்கம்
- சேப்பாக்கம்
- தின மலர்
சென்னை: 16வது ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 29வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை இதுவரை 5 போட்டியில் 3 வெற்றி. 2 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரகானே, ஷிவம் துபே, பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானா வலு சேர்க்கின்றனர். கேப்டன் டோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டாலும் இன்று களம் இறங்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மிட்செல் சான்ட்னர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கலாம்.
மறுபுறம் சன்ரைசர்ஸ், முதல் 2 போட்டியில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த 2 போட்டியில் பஞ்சாப், கொல்கத்தாவை வென்றது. கடைசி போட்டியில் மும்பையிடம் போராடி தோற்ற நிலையில் இன்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல்திரிபாதி, கேப்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் என வலுவான வரிசை உள்ளது. இவர்கள் இன்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னையை சொந்த மண்ணில் வெல்லலாம். பவுலிங்கில், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டேவுடன், உள்ளூரில் களம் இறங்கும் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 13ல் சிஎஸ்கே, 5ல் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் சிஎஸ்கே 4ல் வென்றுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்: சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்குதான் சாதகமாக இருக்கும். இந்த சீசனி்ல் இதுவரை இங்கு 2 போட்டிகள் நடந்துள்ளன. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் 16, வேகப்பந்து வீச்சாளர்கள் 11 விக்கெட் எடுத்துள்ளனர். இன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கடைசியாக ஆடிய 23 போட்டிகளில் 19ல் வென்றுள்ளது.
The post சேப்பாக்கத்தில் இன்று சிஎஸ்கேவுடன் மோதல்: வெற்றிப்பாதைக்கு திரும்ப சன்ரைசர்ஸ் முனைப்பு appeared first on Dinakaran.
