×

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்: சட்டசபையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு

 

சென்னை: சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசுகையில், தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பேசியதாவது: தமிழகத்தில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

வருடம் ஒன்றிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனையாகிறது. விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் நேரடியாகவொ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி தொழில் பாதித்துள்ளது. குறைந்த விலையில் 20 தீப்பெட்டி உடைய அளவில் இந்த லைட்டர் வந்துள்ளதால் மொத்தமாக இந்த 20% அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது.

இது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளரும் ஒன்றிய அரசின் கடிதம் எழுதினார். தற்பொழுது குஜராத் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அடிப்படையில் கூடுதல் உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார்.

The post சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்: சட்டசபையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Minister Tha.Mo ,Anbarasan ,Chennai ,AIADMK ,legislator ,Kadambur Raju ,Anparasan ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...