×

ரமலான் பண்டிகையையொட்டி சூடானில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில் தாக்குதல் நடத்துவதால் மக்கள் அச்சம்..!!

கார்டூம்: சூடானில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சூடானில் உள்ளவர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடவும், விருப்பம் இருப்பவர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறவும் கோரி தாக்குதலை நிறுத்த ஐ.நா. சபை கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் 6 நாட்கள் நடந்த போர் இன்று முதல் 75 மணி நேரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை தலைநகர் கார்டூம் பகுதியில் வான்வெளி தாக்குதல் நடைபெற்றது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட நிலையில் பொதுமக்களை தாக்கும் நோக்கில் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக இதற்கு துணை ராணுவ தலைமை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் அவர்கள் தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ரமலான் பண்டிகைக்கு இடையிலும் தாக்குதல் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post ரமலான் பண்டிகையையொட்டி சூடானில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில் தாக்குதல் நடத்துவதால் மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Sudan ,Khartoum ,Dinakaran ,
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...