×

மெட்ரோ ரயில் பணியிடத்தில் தீ தடுப்பு ஒத்திகை

திருவொற்றியூர்: தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணி மற்றும் மாதவரம் தீயணைப்புத் துறை சார்பில், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் பணியிடத்தில் நடைபெற்றது. சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் தென்னரசு இதில் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன், நிலைய அலுவலர்கள் பர்குணன், ஜெயச்சந்திரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இதில் பங்கேற்று, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி தொழிலாளர்களை மீட்பது, தீப்பற்றினால் அதிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த செய்முறை விளக்கம் அளித்தனர். அப்போது பல நவீன கருவிகள் மூலம் காயமடைந்தவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடந்தது.

பெரம்பூர்: தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு, தீயணைப்புத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் செம்பியம் மற்றும் கொளத்தூர் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. செம்பியம் நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

செம்பியம், கொளத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான செயல்முறை விளக்க நிகழ்ச்சியை மேற்கொண்டனர். திடீரென்று மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் பதற்றம் அடையாமல் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கினர்.

The post மெட்ரோ ரயில் பணியிடத்தில் தீ தடுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Tamil Nadu Fire and Rescue Service ,Madhavaram Fire Department ,Metro Rail ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...