×

பழநி- இடும்பன் மலைகள் இடையே ரூ.32 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் பக்தர்கள் மகிழ்ச்சி

 

பழநி, ஏப். 21: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக இடும்பன் மலை ரோப்கார் திட்டம் இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். ஆனால், அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பழநி வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வலியுறுத்தினார். இதன் பயனாக கடந்த 2021-22ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தில் பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கு ரோப்கார் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பழநி கோயிலுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டார். இதில் ரூ.32 கோடியில் பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கு ரோப்கார் அமைக்கப்படுமென தெரிவித்திருந்தார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழநி மலைக்கோயிலை போல், இடும்பன் மலையும் பிரசித்தி பெற்று விளங்கும் என்பதால் பக்தர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தவிர, பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சுற்றுலா வழிகாட்டிகள், பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினை அளிக்கும் வகையில் மின்னனு ஆலோசனை பெட்டி திட்டம் போன்றவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

The post பழநி- இடும்பன் மலைகள் இடையே ரூ.32 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Palani-Idumban ,Palani ,Itumban hill ,Palani-Itumban hills ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு