×

(தி.மலை) பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்பாடு

திருவண்ணாமலை, ஏப்.21: திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடையின் தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அப்போதே, அதிகபட்சமாக 102 டிகிரியை கடந்து விட்ட நிலையில், கத்தரி வெயில் தொடங்கினால் அதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை காலத்தில் தண்ணீர் தேடி பறவைகள் தவிப்பது வழக்கமாகும். எனவே, தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு, போலீஸ் ஸ்டேஷன்கள் முன்பு தண்ணீர் மற்றும் தானியங்களை வைக்க எஸ்பி கார்த்திகேயன் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் எஸ்பி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளுக்கான தண்ணீர், தானியம் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக, பறவைகள் எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்லும் மரங்கள் உள்ள இடத்தில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர், தானியம் வைத்துள்ளனர். போலீசாரின் இந்த மனித நேய செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

The post (தி.மலை) பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : T.Malaya ,Thiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி...