×

காவலர்கள் மக்களின் நண்பர் என்பதை உறுதி செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை:சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கீழ்வேளூர் நாகை மாலி (மார்க்சிஸ்ட்) பேசியதாவது:
தமிழகத்தில் லாக்அப் மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லாக்அப் மரணங்களே இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். காவலர்களுக்கு என்று தனியாக சங்கம் வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

 

தமிழக அரசு இதில் முன்னுதாரணமாக இருந்து காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி தர வேண்டும். குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை கூடுதலாக வைக்க வேண்டும். காவல் மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காவல் துறையில் பணியாற்றி வரும் 558 தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காவலர்கள் மக்களின் நண்பர் என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post காவலர்கள் மக்களின் நண்பர் என்பதை உறுதி செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Marxist ,MLA ,Chennai ,Legislative ,Assembly ,Kilvellur Nagai Mali ,Tamil Nadu ,
× RELATED அமோனியா வாயு கசிவை ஏற்படுத்திய...