×

உணவு, தண்ணீர் இல்லை: சூடானின் கர்தூம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

கார்டோம்: சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்தபோதிலும் கர்தூம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 5வது நாளாக நேற்றும் சண்டை நீடித்தது. தலைநகர் கார்டோம் மற்றும் ஓம்டர்மேன் நகரங்களில் துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டன. ராணுவ தலைமையகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் அருகிலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

செவ்வாய் கிழமை முதல் புதன் கிழமை சூரிய அஸ்தமனம் வரை 24 மணி நேர போர் நிறுத்தம் அமலில் இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இரு ஜெனரல்களிடம் பேசியதை அடுத்து போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். எனினும் அவர்கள் அவற்றை கடைப்பிடிக்க தவறியுள்ளனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரமாக வீடுகளில் முடங்கி இருந்த சூடான் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத்தொடங்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களது உடமைகளுடன் நடந்தும் வாகனங்களிலும் நகரங்கை விட்டு வெளியேறத்தொடங்கி உள்ளனர்.

இதனிடையே ராணுவ மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சூடானில் தற்போது நிலைமை மிகவும் பதற்றமாக காணப்படுவதால் அங்கு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்தபோதிலும் கர்தூம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்லும் நிலையில் இந்தியர்கள் தவிக்கின்றனர்.

தாக்குதல் நடக்கும் இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்கின்றனர்; இந்தியர்கள் உள்ளிட்டோர் எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். உணவு, தண்ணீர் இல்லை; தங்கியிருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கர்தூம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post உணவு, தண்ணீர் இல்லை: சூடானின் கர்தூம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Sudan ,Khartoum ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு