×

வந்தே பாரத் ரயில் தாமதம் ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட்: கடும் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம்-கண்ணூர் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த ரயில் தற்போது காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் ரயில் நிலையத்தை அடைந்தது.அப்போது, வந்தே பாரத் ரயிலுக்கு சிக்னல் தராமல் வேணாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கட்டுப்பாட்டு அதிகாரி குமார் சிக்னல் கொடுத்தார். இதனால், வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் தாமதமானது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது மற்ற அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ரயிலை நிறுத்தி வைத்து வேணாடு ரயிலுக்கு சிக்னல் கொடுத்தததால் கட்டுப்பாட்டு அதிகாரி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு ரயில்வே ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

The post வந்தே பாரத் ரயில் தாமதம் ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட்: கடும் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Thiruvananthapuram ,Thiruvananthapuram- ,Kannur ,Kerala ,Vande Bharat Train Delay Railway ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...