×

செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆந்திர தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: வருகிற செப்டம்பரில் இருந்து ஆந்திர மாநில தலைநகரம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் என்றும், நானும் அங்கேயே குடியேறுவேன் என்று பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று காகுளம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: மாநிலம் முழுவதும் நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.

செப்டம்பரில் இருந்து விசாகப்பட்டினத்திலேயே நானும் எனது வீட்டில் தங்குவேன். விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம். அரசியல் தர்ம யுத்தத்தில் உங்கள் குழந்தை ஜெகன் ஒரு பக்கம் தனியாக இருக்கிறேன். அனைவரும் ஒன்று சேர்ந்து என்னுடன் ஒரு இருண்ட யுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களைப் போல் பொய் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. இந்தப் போரில் என் தைரியம், நம்பிக்கை மற்றும் உங்கள் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையே. இவ்வாறு அவர் பேசினார்.

The post செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆந்திர தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Visakhapatnam ,Chief Minister ,Jaganmohan ,Tirumala ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...