×

மோடியை சந்தித்தார் ‘ஆப்பிள்’ டிம் குக்

  • உலக அளவில் 25 நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் 552 ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் மும்பை, டெல்லியில் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி: பிரதமர் மோடியை நேற்று ஆப்பிள்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சந்தித்து பேசினார்.இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ளது. இன்று டெல்லி சாகேட்டின் செலக்ட் சிட்டி மாலில் 2வது ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைக்கிறார். இதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் நேற்று டெல்லி வந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுபற்றி டிம் குக் நேற்று வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,’ பிரதமர் மோடியின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. தொழில்நுட்பம் இந்தியாவின் எதிர்காலம். எனவே கல்வி முதல் உற்பத்தி, சுற்றுச்சூழல் வரை நாடு முழுவதும் வளர்ச்சி பணிகளில் முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளோம் என்ற உங்கள் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்’ என்று குக் டிவீட் செய்துள்ளார். இதை தொடர்ந்து டிம் குக் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து பேச உள்ளார்.

The post மோடியை சந்தித்தார் ‘ஆப்பிள்’ டிம் குக் appeared first on Dinakaran.

Tags : Apple ,Tim Cook ,Modi ,New Delhi ,CEO ,India ,Dinakaran ,
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!