
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்தி விட்டது. ஆல்டோ கே10க்கு மாற்றாக மலிவு விலை காராக 2012ம் ஆண்டு இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்டில் வெளிவந்தது. கிவிட் மற்றும் ரெடி – கோ கார்கள் 800 சிசி கார்களாக வெளிவந்தன. இவையும் ஏற்கெனவே நிறுத்தப்பட்டு விட்டதால், இனி 800 சிசி கார்கள் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு இருக்காது. மாருதியின் துவக்க வேரியண்டாக இனி ஆல்டோ கே10 இருக்கும்.
கடந்த 2022-23 நிதியாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் 20 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 19.22 லட்சம் கார்களை உற்பத்தி செய்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த நிறுவனம் 1.54 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 6 சதவீதம் குறைவு. கார் உற்பத்தி குறைவுக்கு எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளதாக கூறியுள்ள மாருதி சுசூகி நிறுவனம், இதனால் நடப்பு நிதியாண்டிலும் கார் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
The post ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்தியது மாருதி சுசூகி..!! appeared first on Dinakaran.
