×

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி: ஏப்.23ல் நடிகர் பிரபு திறந்து வைக்கிறார்

திருச்சி,ஏப்.19: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை ஏப்.23ம் தேதி நடிகர் பிரபு திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டமாக \”எங்கள் முதல்வர் எங்கள் பெருமை\”என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 325க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் 12 ஆயிரம் சதுர அடி அரங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட திமுகவினர் முன்னெடுத்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சென்னை அரசு ஆர்ட்ஸ் மற்றும் நடிகரும், கவிஞருமான ஜோ மல்லூரியின் ஒருங்கிணைப்பில் இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 23 ம் தேதி காலை 9 மணிக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை நடிகர் பிரபு திறந்து வைக்கிறார். தொடர்ந்து 8 நாட்கள் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விமல், ஒளிப்பதிவாளர் பி.சி ராம் மற்றும் இயக்குனர் லிங்குசாமி போன்றோர் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு நாள் மாலையிலும் 6 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி: ஏப்.23ல் நடிகர் பிரபு திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Prabhu ,Chief Minister ,M. K. Stalin ,St. ,Joseph's College ,Trichy ,St. Joseph's College ,Joseph ,College ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...