×

மேட்டூர் அணைக்குநீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர், ஏப்.19: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1000 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு 948 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 797 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 102.45 அடியில் இருந்து 102.38 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 67.96 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு
நீர்வரத்து மேலும் சரிவு
appeared first on Dinakaran.

Tags : Matour Dummwater ,Mattur ,Ogenakal ,Mattur Dam ,Kaviri ,Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...