×

அமெரிக்கா வேண்டுகோளை ஏற்று சூடானில் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்: ராணுவம், துணை ராணுவம் ஒப்புதல்

கார்டோம்: அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ராணுவம், துணை ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த போர் நிறுத்தம் நேற்று மாலை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் 3வது மிகப் பெரிய நாடான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்எஸ்எப்) துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கார்டோம் உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை கொண்டு இரு தரப்பினரும் சண்டையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தூதரக வாகனம், மீட்பு படையினர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதரக அதிகாரி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், “ சூடான் ராணுவத்துக்கு எதிராக போர் புரியும் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப். அமெரிக்க தூதரக வாகனத்தை தாக்கியுள்ளது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தூதரக அதிகாரிகள் மீதான தாக்குதல், அச்சுறுத்தல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரு தரப்பினரும் 24 மணி நேரம் போரை நிறுத்திவிட்டு, அமைதி பேச்சுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் 24 மணி நேரப் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று ராணுவ படை தளபதி அப்தெல் பத்தா புர்கான் மற்றும் துணை ராணுவ தளபதி டகாலோவும் 24 மணி நேரப் போர் நிறுத்தத்துக்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

The post அமெரிக்கா வேண்டுகோளை ஏற்று சூடானில் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்: ராணுவம், துணை ராணுவம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : -hour ,Sudan ,US ,Khartoum ,America ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு