×

மாமல்லபுரம், திருவிடந்தையில் பெருமாள் கோயில்களில் வராக ஜெயந்தி விழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம், திருவிடந்தையில் உள்ள பெருமாள் கோயில்களில் வராக ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று வராக ஜெயந்தியை முன்னிட்டு மாமல்லபுரம் வராக பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், ஞானபிரான், ஸ்ரீதேவி – பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது.

ஆதிவராக பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி திருவீதி உலா கலங்கரை விளக்க சாலை, பழைய சிற்பக் கல்லூரி சாலை, தென் மாட வீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜவீதி வழியாக வந்து பொதுப்பணி துறை சாலையில் உள்ள வராக பெருமாள் கோயிலில் நிறைவு பெற்றது. இதேபோல், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர். இதையடுத்து, மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சாமி வீதி உலா நடந்தது.

The post மாமல்லபுரம், திருவிடந்தையில் பெருமாள் கோயில்களில் வராக ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Varaha Jayanti Festival ,Perumal Temples ,Mamallapuram, Thiruvidanthai ,Mamallapuram ,Varaha Perumal ,Mamallapuram, ,Thiruvidanthai ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...