×

தமிழை தேடி இயக்க பணியை விரைவுபடுத்த வேண்டும்: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழைத் தேடி இயக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நாம் மேற்கொண்ட ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பிரசார பயணம் ஆக்கப்பூர்வ தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், எண்ணற்ற இடங்களில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் ஆகிய பதாகைகள் அமைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்பணிகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தமிழன்னைக்கு தொண்டு செய்வதன் மூலம் என்னை மகிழ்ச்சிப்படுத்துங்கள். தமிழைத்தேடி இயக்கத்தின் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அதை நினைத்து இளைப்பாறாமல் தொடர்ந்து அதே வேகத்தில் தமிழ்ப்பணிகளை செய்வோம்.

The post தமிழை தேடி இயக்க பணியை விரைவுபடுத்த வேண்டும்: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Bamakavins ,CHENNAI ,Ramadoss ,Bamagavinar ,Tamil ,Bamakavinar ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக...