×

திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில், பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். கோடை காலத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு, பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். மேலும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிதர், துணை தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், மாவட்ட, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Neer Mor Pandal ,DMK ,MLA ,Wallajahabad ,Kanchipuram ,Selvam ,Uttaramerur ,Sundar ,Perur DMK ,Wallajabad ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...