×

நிலம் அளவீடு செய்ய லஞ்சம் பெண் சர்வேயர் கைது

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி(30). இந்நிலையில், பாலாபுரத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடத்தின் மனைவி புவனேஸ்வரி தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் ஸ்ரீதேவியை சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார். அப்போது, அவரை சர்வேயர் பலமுறை அலைக்கழித்துள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி ஸ்ரீதேவியிடம் கேட்டதற்கு, `ரூ.3500 வழங்கினால் சர்வே செய்வேன்,’ என்று  கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புவனேஷ்வரி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் இதுகுறித்து புகாரளித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய பணத்தை புவனேஸ்வரி வாங்கி நேற்று மாலை பாலாபுரத்திற்கு சென்று சர்வேயர் ஸ்ரீதேவியிடம் வழங்கினார். அப்போது, அதே பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சர்வேயர் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்து கைது  செய்தனர். நில அளவீடு செய்ய ரூ.3500 லஞ்சம் பெற்ற பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்த சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post நிலம் அளவீடு செய்ய லஞ்சம் பெண் சர்வேயர் கைது appeared first on Dinakaran.

Tags : R. K. Sridevi ,Patet Watthasir ,Bhubaneswari ,Balapuram ,
× RELATED இளம்பெண் மாயம்