×

குழந்தையுடன் பெண் மாயம்

சேலம், செப்.20: சேலம் ஓமலூர் அடுத்த வெள்ளக்கல்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி புவனேஸ்வரி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கனவரை பிரிந்த புவனேஸ்வரி பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 13ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தபோது புவனேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த போதும் கிடைக்கவில்லை. புவனேஸ்வரியின் தந்தை ராஜசேகர் கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post குழந்தையுடன் பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Govindaraj ,Indiranagar ,Vellakalpatti ,Salem Omalur ,Bhubaneswari ,Bhuvaneshwari ,Kanavari ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி