×

லாகூரில் முதல் டி.20 போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இன்று இரவு மோதல்

லாகூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் முதலில் டி.20 தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டி லாகூரில் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், முகமது ரிஸ்வான், பகார் ஜமான், ஷாகின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப் என முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். அண்மையில் ஆப்கனிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

மறுபுறம் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி வருவதால் டாம் லாதம் தலைமையில் களம் காண்கிறது. சாட் போவ்ல், மார்சாப்மேன், டேன் கிளீவர் , டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரன் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பவுலிங்கில் மாட் ஹென்றி, பென் லிஸ்டர், ஆடம்மில்னே, இஷ் சோதி,பிளேர் டிக்னர் இடம் பெற்றுள்ளனர்.. டி.20 போட்டியில் இரு அணிகளும் இதற்கு முன் 29 முறை மோதி உள்ளன. இதில் 18ல் பாகிஸ்தான், 11ல் நியூசிலாந்து வென்றுள்ளன.

The post லாகூரில் முதல் டி.20 போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இன்று இரவு மோதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,New Zealand ,T20 match ,Lahore ,Dinakaran ,
× RELATED ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி