×

கல்லணை காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு தொட்டி

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.14: கல்லணை காவிரி ஆற்றில் பொமக்கள், சுற்றுலா பயணிகள் குழிக்க பாதுகாப்பு தொட்டி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் பணிகளில் நீட்டித்தல், புணரமைத்தல், மற்றும் நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பை அரசு நிறைவேற்றி தந்துள்ளது. கல்லணையை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து ஆடி 18க்கு காவிரியாற்றில் புதுமண தம்பதிகள் தங்களது குடும்பங்களோடு வந்து ஆற்றில் படையல் போட்டு சாமி கும்பிட்டு மாலைகள், மற்ற பொருட்களை ஆற்றில் விட்டு குளித்துவிட்டு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு செல்வார்கள். அதேபோல தங்களது குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு தர்பணமும் காவிரி ஆற்றில்தான் கொடுத்து வருகின்றனர்.

மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தண்ணீர் வரும் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களோடு வந்து காவிரியில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரின் அழகை கண்டு களிப்பதோடு காவிரி ஆற்றில் இறங்கி குளித்து மகிந்து செல்வர். ஆனால் காவிரி ஆற்றில் அதிகமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கும் நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆழம் தெரியாமலும், தண்ணீரின் இழுவை தெரியாமலும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படாமல் இருக்கவும், புதுமண தம்பதிகள், மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குழிப்பதற்கு காவிரி ஆற்றில் 60 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் பெரிய அளவிலான தொட்டி அமைத்து,

அதில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக பிரித்து 3 அடி ஆழ தொட்டியில் 2 அடிக்கு மட்டும் தண்ணீர் நிற்கும் வகையில் குழந்தைகள், முதியவர்கள் நலன்கருதி அமைக்கப்படுகிறது. மேலும் குளிக்கும் தண்ணீர் தொட்டியினுள் தேங்கா வண்ணம் புது தண்ணீர் வந்து செல்லவும் வடிவமைக்கப்படுகிறது. இந்த தொட்டியின் சுற்றுசுவரில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தடுப்பை தாண்டி சென்றுவிடாதபடி கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது. யாரும் ஆற்றினுள் இறங்கி குளிக்காவண்ணம் பாதுகாப்பு நிறைந்த தொட்டியினுள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆற்றினுள் இறங்கி குழிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. அதே போன்று வெண்ணாற்றிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடுப்புகளுடன் கூடிய தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

The post கல்லணை காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு தொட்டி appeared first on Dinakaran.

Tags : Kallani ,Cauvery river ,Thirukkatupalli ,Kallanai Cauvery river ,Kallanai Cauvery ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு