×

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தோகைமலை, ஏப். 14: கடவூர் தரகம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் படி இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அலுவலக வளாகத்தில் நடந்த சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கடவூர் ஒன்றிய ஆனையர்கள் (வட்டார ஊராட்சி) ராணி, (கிராம ஊராட்சி) சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அப்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் எதுமில்லாத சமத்து சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவுலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Dr. ,Ambedkar ,Kadavur Dharagambatti Union Office ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு