×

சிறுநீரக பிரச்னைக்கு பதில் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை; தவறான சிகிச்சையால் சிறுமியின் கை, கால்கள் செயலிழப்பு: தலைமை செயலகம் முன்பு மகளுடன் காவலர் போராட்டம்

சென்னை: டாக்டர்களின் தவறான சிகிச்சையால், எனது மகளின் கை மற்றும் கால் விழுந்து விட்டது. எனவே தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகளுடன் தலைமை காவலர் ஒருவர் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு தொடர் தற்போது தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கூட்டத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, கோதண்டராமன் காவலர் சீருடையில் தனது 10 வயது மகளுடன் தலைமை செயலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அதிர்ச்சியடைந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அவர், தனது மகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்காமல், மூலைக்காய்ச்சலுக்கான சிகிச்சையை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அளித்துள்ளனர். அதற்கான மாத்திரை, ஊசிகளையும் போட்டுள்ளனர். இதனால் எனது மகள் 25 கிலோ எடையில் இருந்து தற்போது 15 கிலோவாக குறைந்துள்ளார். அத்துடன், எனது மகளின் வலது கால் கருகியது. தற்போது, எனது மகளின் கை மற்றும் கால் செயலிழந்துவிட்டது. எனவே தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தலைமை காவலர் கோதண்டராமனை சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் தலைமை செயலகம் முன்பு பரபரப்பு நிலைவியது. தலைமை செயலாகம் முன்பாக போராட்டம் நடத்திய தலைமை காவலர் கோதண்டராமன், ஓட்டேரி காவல்நியைத்தில் பணியாற்றி வருகிறார். அதைதொடர்ந்து போராட்டம் நடத்திய தலைமை காவலர் கோதண்டராமனிடம் கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுநீரக பிரச்னைக்கு பதில் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை; தவறான சிகிச்சையால் சிறுமியின் கை, கால்கள் செயலிழப்பு: தலைமை செயலகம் முன்பு மகளுடன் காவலர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Secretariat ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...