×

கடன் சங்கத்தில் 14 லட்சம் கையாடல் செய்த வழக்கில் செயலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை: 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை, திருத்தணி நீதிமன்றம் உத்தரவு

திருத்தணி: திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் கடன் சங்கத்தில் ரூ.14 லட்சம் கையாடல் செய்த வழக்கில், செயலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதித்து திருத்தணி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்ததிருவலாங்காடு பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக கடன் அளிக்க உருவாக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிக்கன கடன் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தது போல் போலியான ஆவணங்கள் காட்டி, அதன் மூலம் சுமார் 13 லட்சத்து 71 ஆயிரத்து 34 ரூ.பாய் கையாடல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்ட பொருளாதார குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2004ம் ஆண்டு சங்கத்தின் செயலாளர் வசந்தி ஜூலியட், தனி அலுவலர் சத்தியமூர்த்தி, குருராமச்சந்திரன், குணா, ரகுராமன், சிவராமன், வேலாயுதம் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து செய்து இருந்தனர். இதில் ஏழு பேரும் அப்போதே முன் ஜாமீன் பெற்று இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 19 ஆண்டுகளாக திருத்தணி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், தொடர்புடைய சிவராமன்(75) வேலாயுதம்(71) உடல்நிலை குறைவு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டனர்.

கடந்த பத்தாம் தேதி வழக்கின் இறுதி விசாரணையில், சங்கத்தின் பணத்தை 14 லட்சம் ரூ.பாய் கையடல் செய்ததற்கான குற்றம் நிரூ.பிக்கப்பட்டது. இதையடுத்து, சங்கத்தின் செயலாளர் வசந்தி ஜூலியட்டுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.6000 அபராதம் விதித்து திருத்தணி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில், தடயங்கள் அழிப்பதற்காகவே கடந்த 2004ம் ஆண்டு அந்த சங்க கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

The post கடன் சங்கத்தில் 14 லட்சம் கையாடல் செய்த வழக்கில் செயலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை: 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை, திருத்தணி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvalangadu Panchayat Union ,
× RELATED டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத...