×

ஒன்றிய அமைச்சர், அவரது மகனின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில், பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசினார். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஒன்றிய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை. திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது. தவறாக இருந்தால் நீக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்’, என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர் தகாதா வார்த்தையா? ஏன் அவைக்குறிப்பில் நீக்க வேண்டும்? என்றார்.

The post ஒன்றிய அமைச்சர், அவரது மகனின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union ,minister ,Chief Minister ,M. K. Stalin ,BJP ,Legislative ,Party ,Nayanar Nagendran ,Department of Youth Welfare and Sports Development ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...