×

இலங்கையில் இருந்து 1,00,000 குரங்குகள் சீனா வாங்குகிறது

கொழும்பு: இலங்கையில் இருந்து 1,00,000 குரங்குகளை சீனா வாங்குகிறது. அரிய இனமான டோக் மக்காக்(toque macaques) குரங்குகள் இனம் இலங்கைக்கு சொந்தமானது. மேலும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ஆபத்தானதாக இந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இந்த இன குரங்குகள் எண்ணிக்கையானது சுமார் 30லட்சத்தை எட்டியுள்ளது. இவை உள்ளூர் பயிர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் உள்ள 1000 உயிரியல் பூங்காக்களுக்கு டோக் மாக்காக் குரங்குகளை கொண்டு செல்வதற்காக இலங்கை அரசிடம் சீனா கோரிக்கை வைத்துள்ளது. சீனாவின் கோரிக்கைக்கு இணங்க ஒரு லட்சம் குரங்குளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிதி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

The post இலங்கையில் இருந்து 1,00,000 குரங்குகள் சீனா வாங்குகிறது appeared first on Dinakaran.

Tags : China ,Sri Lanka ,Colombo ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து