- திருப்பூர் மாவட்டம் காங்கேயா
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்டம்
- காங்கேயம்
- திருப்பூர் மாவட்டம்,
- கங்கீயம்
- தின மலர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிரதான சாலையில் இன்று காலை முதல் மதியம் வரை மதுபோதையில் அரசுப்பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அட்டகாசம் செய்த பெண்ணால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிக்கு வந்த போலீசாரிடம் மது வாங்கி தருமாறு அந்த பெண் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை உள்ளது. சந்தை அருகில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், டாஸ்மாக் கடையில் மதுபானத்தை வாங்கி குடித்துவிட்டு, கடையின் முன் உள்ள பிரதான சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கேயம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த அரசுப்பேருந்தை வழிமறித்து அப்பெண் ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசாரின் விசாரணையில், அந்த பெண் திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும், அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுபோதைக்கு அடிமையாகியது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் பொள்ளாச்சியில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுப்பட்டதும் இதே பெண் என போலீசார் தெரிவித்தனர்.
The post திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போதையில் சாலையில் ரகளையில் ஈடுப்பட்ட பெண்ணால் பரபரப்பு appeared first on Dinakaran.