×

கிண்டி அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர்.!

சென்னை: கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் சென்று ஆய்வு செய்தார்கள். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (11.4.2023) காலை, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் சென்று, கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டு வரும் “அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை“ ஆய்வு செய்தார்கள்.

ரூ.230 கோடி மதிப்பீட்டில், 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் உடையதாக, 1000 படுக்கைகளுடன்கூடிய இந்த மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 1.4.2022 அன்று தொடங்கிய இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள், 15.5.2023க்குள் கட்டி முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டபொழுது, இதுவரை தரைத்தளத்தில், 75 சதவீதப் பணிகள் நிறைவுற்றுள்ளதையும், தரை அமைக்கும் பணிகளும், அவசர அறுவைச் சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு வரும் பணிகளும், ஜன்னல் கம்பிகள் பொருத்தும் பணிகளும், மருத்துவ வாயு குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு, இப்பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

Tags : A.V.Velu ,M.Subramanian ,Pannoku High Specialty Hospital ,Government of Guindy ,CHENNAI ,Government Multi-speciality Hospital ,Kindy ,King Institutional Complex ,
× RELATED தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட,...