×

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையில் பொதுத்தேர்வு நடந்தது. பிளஸ்-2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 12ம் வகுப்பு விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நிறைவடைந்தது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) வெளியானது.

இதில் இந்த தேர்வில் தமிழ்நாட்டில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் தேர்வில் பங்கேற்றனர். இதில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வில் 41,410 பேர் தேர்ச்சி அடையவில்லை.

தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

The post பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,K. Stalin ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி...